கூகுள் மொழிபெயர்ப்பின் புதிய டிரான்ஸ்கிரிப்ட் அம்சம் !இது பதுசு

 கூகுள் மொழிபெயர்ப்பின் புதிய டிரான்ஸ்கிரிப்ட் அம்சம் !இது பதுசு

                         கூகுள்  மொழிபெயர்ப்பு என்பது சிறந்த மொழிபெயர்ப்பு பயன்பாடுகளில் ஒன்றாகும்.இதிலுள்ள மிகச்சிறந்த அம்சங்களில் ஒன்று, இது நிகழ்நேரத்தில் உரையாடல்களை நடத்துவதற்கும் அவற்றை உங்கள் தொலைபேசியில் மொழிபெயர்ப்பதற்கும் உதவும்.

உங்கள் தொலைபேசியில் நிகழ்நேர மொழிபெயர்ப்புகளின் இந்த டிரான்ஸ்கிரிப்ட்களை சேமிக்க அனுமதிக்கும் என்று நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.  நீங்கள் உரையை எழுதும்போது திரையின் மேல் வலது மூலையில் ஒரு நட்சத்திர பொத்தானைக் காண்பீர்கள். இந்த பொத்தானைத் தட்டினால், உங்கள் தொலைபேசியில் டிரான்ஸ்கிரிப்டுகள் சேமிக்கப்படும். பக்கத்திலுள்ள sidebar இருந்து இவற்றை அணுகலாம்  

                             Google Translate Gets A Mobile Friendly Makeover | LiveatPC.com - Home of  PC.com Malaysia

                    கூகுளின் இந்த டிரான்ஸ்கிரிப்ட் அம்சம் இப்போது ஆங்கிலம், இந்தி, ஸ்பானிஷ், பிரஞ்சு, ஜெர்மன், தாய், இத்தாலியன், ரஷ்யன் மற்றும் போர்த்துகீசியம் என ஒன்பது மொழிகளில் செயல்படுகிறது.

XDA டெவலப்பர்களின் கூற்றுப்படி,  மே மாதத்தில் இந்த அம்சம்  டெவலப்-ன் கீழ் காணப்பட்டது. ஆனால் இது சேவையக பக்கம்  (server side ) இருப்பதால்,அனைவருக்கும் காண்பிக்கப்படாமல் போகலாம். உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் பிளே ஸ்டோரில் கிடைக்கும் கூகுள் மொழிபெயர்ப்பிற்கான சமீபத்திய பதிப்பை  புதுப்பிதன் மூலம் உங்களுக்கு கிடைக்கலாம்.

நீங்கள் இந்த டிரான்ஸ்கிரிப்ட் அம்சத்தை பயன்படுத்துவீர்களா ? இது பயனுள்ள அம்சம் என்று நினைக்கிறீர்களா? உங்கள் கருத்துக்களை ஷேர் செய்யுங்கள்…..

                

Comments

Popular posts from this blog

Android பயனர்கள் தனியாக ஆப் இன்ஸ்டால் செய்யாமல் மற்றொரு ஆண்ட்ராய்டு சாதனத்துக்கு ஷேர் செய்துக்கொள்ள புது வசதி!

விண்டோஸ் 10 Task Manager புதிய அம்சங்களுடன் !

TNPSC குரூப் 2 முதல்நிலைத் தேர்வுக்கான விடைக்குறிப்புகள்