Android பயனர்கள் தனியாக ஆப் இன்ஸ்டால் செய்யாமல் மற்றொரு ஆண்ட்ராய்டு சாதனத்துக்கு ஷேர் செய்துக்கொள்ள புது வசதி!

    Android பயனர்கள் தனியாக ஆப் இன்ஸ்டால் செய்யாமல்  மற்றொரு ஆண்ட்ராய்டு சாதனத்துக்கு ஷேர் செய்துக்கொள்ள புது வசதி!


   SHAREit மற்றும் Xender போன்ற ஷேரிங் பயன்பாடுகள் தடை செய்யப்பட்ட பின்னர், பயனர்களுக்கு ஃபைல் ஷேரிங் செய்வதற்கான ஒரு நம்பிக்கையான அங்கீகரிக்கப்பட்ட பயன்பாடு எது என்பது தெரியாமல் பல பயன்பாடுகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கூடுதல் ஆப்ஸ் எதுவும் இன்ஸ்டால் செய்யாமல் ஃபைல் ஷேரிங் செய்ய முடியும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

                                                    



     

கூகிள் நிறுவனம் தற்பொழுது இதற்கான ஒரு அற்புதமான தீர்வை அனைவருக்கும் கிடைக்கும்படி அறிமுகப்படுத்தியுள்ளது. Nearby Share - நியர்பை ஷேர் என்ற அம்சத்தை புதிய ஆண்ட்ராய்டு அப்டேட் மூலம் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்துள்ளது.

போட்டோக்கள், வீடியோக்கள் மற்றும் பல

ஆண்ட்ராய்டு பதிப்பு 6.0 வெர்ஷனிற்கு மேல் இருக்கும் அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிலும் தற்பொழுது இந்த புதிய Nearby Share அம்சம் பயன்படுத்த கிடைக்கிறது. இந்த அம்சத்தின் மூலம் போட்டோக்கள், வீடியோக்கள் மற்றும் அனைத்து தகவல்களையும் நீங்கள் எளிதாக நொடியில் பரிமாறிக்கொள்ளலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

எப்படி Nearby Share மூலம் ஷேர் செய்வது?

  • உங்கள் ஸ்மார்ட்போனில் Settings> சென்று கீழ் நோக்கி ஸ்க்ரோல் செய்யுங்கள், கீழே காணப்படும் > Google ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். 
  • Device Connections என்ற சாதன இணைப்பிற்கான ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  •  உங்கள் ஸ்மார்ட்போனில் Nearby Share ஆதரித்தால், அடுத்த பக்கத்தில் அதற்கான விருப்பத்தை நீங்கள் காணலாம்.
  • நீங்கள் அதை on or off செய்து பயன்படுத்தலாம். உங்கள் Google கணக்கைத் தேர்ந்தெடுத்து சாதனத்தின் பெயரையும் மாற்றி அமைக்கலாம். 
  • மேலும், device visibility, மற்றும் data usage விபரங்களையும் அமைக்கலாம்.
                                                  


Nearby Share மூலம் எப்படி ரிஸீவ் செய்வது?

  • நீங்கள் ஷேர் செய்ய விரும்பும் தகவலை கிளிக் செய்து, share> Nearby Share ஐகானை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது, உங்கள் ஸ்மார்ட்போன் அருகிலுள்ள சாதனங்களைத் தேடத் தொடங்கும். 
  • நீங்கள் கோப்பை அனுப்பும் நபர் அவர்களின் Android ஸ்மார்ட்போனில் Nearby Share அம்சத்தை ஆன் செய்ய வேண்டும்.
  •  உங்கள் ஸ்மார்ட்போனின் ரிசீவரின் ஸ்மார்ட்போன் பெயரை உங்களுக்கு கண்டறிந்து காண்பிக்கும், அவர்களின் சாதனத்தின் பெயரைத் இப்போ கிளிக் செய்யுங்கள்.

இனி ஈஸியா ஷேர் செய்யலாம்

  • அதே நேரத்தில் பரிமாற்றத்தைத் தொடங்க ரிசீவர் தங்களின் போனில் Accept என்பதை கிளிக் செய்ய வேண்டும். 
  • சில நிமிடங்களில், நீங்கள் விரும்பிய ஃபைல்களை ஷேர் செய்துகொள்ளலாம்.
  •  இப்படி Nearby Share அம்சத்தை பயன்படுத்தி இரண்டு Android போன்களுக்கு இடையில் கோப்புகளைப் பகிர்ந்துகொள்ளலாம்.

     

Comments

Popular posts from this blog

விண்டோஸ் 10 Task Manager புதிய அம்சங்களுடன் !

TNPSC குரூப் 2 முதல்நிலைத் தேர்வுக்கான விடைக்குறிப்புகள்